''இதை எல்லாம் கண்டும் காணாமல் போயிரலாம்'' - லேட்டஸ்ட் படத்தின் ஹீரோவுக்கு இயக்குநர் சேரன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விவேக் நடிப்பில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான படம் வெள்ளைப் பூக்கள். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Cheran shares his thought about Vivekh's Vellai Pookal

இந்த படத்துக்கு ராம்கோபால் கிருஷ்ணராஜூ இசையமைக்க, ஜெரால்டு பீட்டர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை இண்டஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் குறித்து திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்துள்ளார்.

அதில், 'வெள்ளைப் பூக்களை நெஞ்சாரப் பாராட்டிய இயக்குநர் சேரன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்' என்றார். அதற்கு இயக்குநரும் நடிகருமான சேரன், ''இந்த விமர்சனங்களை எல்லாம் நீங்கள் கண்டும் காணாமல் போயிரலாம். ஆனால் அதை மதித்து அதற்கு தக்க பதில் அளிக்கும் உங்கள் குணம் உயர்ந்தது சார்..  நன்றி சார்'' என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.