“அடுத்த 48 மணி நேரத்துக்கு செம பிசி” - பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Shanthanu begins continuous 48 hour shooting schedule for Raavana Kottam

கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகியாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகி கயல் ஆனந்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், ‘இராவண கோட்டம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘இராவண கோட்டம் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடர்ச்சியாக 48 மணி நேரம் பரபரப்பாக நடைபெறுகிறது’ என ட்வீட்டியுள்ளார்.

இந்த ஷூட்டிங்கில் நடிகர் பிரபு, ஆனந்தி, இளவரசு, அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், சுஜாதா சிவக்குமார், தீபா சங்கர் உள்ளிடோர் நடிப்பதாகவும் சாந்தனு தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.