Breaking: மீண்டும் தயாரிப்பாளராகும் எஸ்.ஜே.சூர்யா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 10, 2019 02:39 PM
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதுடன், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என்ற பன்முகம் கொண்ட எஸ்.ஜே.சூர்யா, ராதா மோகன் படத்திற்காக மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘இசை’ படத்தில் நடித்து, இயக்கி, இசையமைத்த எஸ்.ஜே.சூர்யா, அந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே மெல்லிய, இயல்பான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ள ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்கு ‘கோமாளி’ படத்திற்கு காட்சிகள் அமைத்த ரிச்சார்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.