50வது ஆண்டில் சென்னையின் பிரபல திரையரங்கம் - நினைவுகளை பகிறும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் மூன்றாவது முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின்போது சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு வருகிற மே 11 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது. இருப்பினும் திரைப்பட படப்பிடிப்புகள் எப்பொழுது தொடங்கலாம் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் திரையரங்குகளை திறப்பது குறித்தும் தகவலில்லை. இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கமான தேவி சினி ப்ளெக்ஸ் தனது 50 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தேவி திரையரங்கம் கடந்த 23/05/1970 முதல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை தேவி திரையரங்கம் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Entertainment sub editor