"அடுத்த பட Director..??.." BB ஜோடிகள் மேடையில் கமல்ஹாசன் கொடுத்த 'Hint'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம், நாளை (03.06.2022) திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Kamal haasan revealed about next director in bb jodigal 2

Also Read | Baakiyalakshmi: "நீங்க விரும்புனவரையே கல்யாணம் பண்ணிட்டு.".. ராதிகாவிடம் பாக்யா.!

லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில், கமலுடன் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதே போல, நடிகர் சூர்யாவும் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்துள்ள தகவல், ஏற்கனவே படக்குழு சார்பாக வெளியிடப்பட்டிருந்தது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரைலர்

அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமல், விஜய் சேதுபதி, பகத் என மூன்று பேரும் ஒன்றாக விக்ரம் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியான போதே, ரசிகர்கள் அனைவரும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினர். அவர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு பெரிதாக்கும் வகையில், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் அமைந்திருந்தது.

Kamal haasan revealed about next director in bb jodigal 2

அடுத்த இயக்குனர் யார்?

இதனால், நாளை படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி, அனைவரும் ஆவலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், தனது அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் குறித்து, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களை ஜோடியாக வைத்து, பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

கமல் உடைத்த சீக்ரெட் ..?

இதில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது, அவரிடம், "அடுத்த படம் பத்தி Exclusive-அ இந்த மேடையில் அவுட் பண்ணலாமா?" என கேள்வி கேட்கப்படுகிறது. இது பற்றி பேசிய கமல், "மாலிக் என்கிற படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் அவர்கள். ராஜ்கமல் பிலிம்ஸ்" என கூறினார்.

Kamal haasan revealed about next director in bb jodigal 2

கமல் இயக்கி நடித்திருந்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட ஏரளமான படங்களுக்கு எடிட்டர் ஆகவும், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்தவர் மகேஷ் நாராயணன். இது போக ஒளிப்பதிவாளராகவும் மகேஷ் நாராயணன் சில படங்களில் பணிபுரிந்துள்ளார். விக்ரம் படத்தின் போது, கமலை மகேஷ் நாராயணன் சந்தித்திருந்த புகைப்படமும் அதிகம் வைரலாகி இருந்தது.

 Kamal haasan revealed about next director in bb jodigal 2

Also Read | "ரெண்டே ரெண்டு பாட்டு'ல.." ஆடியன்ஸை கட்டிப் போட்ட Jonita Gandhi.. Behindwoods விருது மேடையில் அமர்க்களம்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal haasan revealed about next director in bb jodigal 2

People looking for online information on Bb jodigal 2, Kamal Haasan, Vijay Television, Vikram Movie will find this news story useful.