இத்தாலிக்கு நிறைமாத கர்ப்பத்துடன் 'BABY MOON' சென்ற சோனம் கபூர்.. இணையத்தில் வைரலாகும் CUTE போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சோனம் கபூரின் பேபி மூன் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.

Sonam Kapoor Italy Baby Moon Photos went Viral on Instagram

Also Read | ரிலீஸ்க்கு முன்பே BOX OFFICE வசூலில் மாஸ் காட்டிய 'விக்ரம்'.. வெளியான OFFICIAL தகவல்!

தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின்  மகள் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். சோனம் கபூர். கடந்த 2018-ல்  நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார். சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

Sonam Kapoor Italy Baby Moon Photos went Viral on Instagram

மேலும் நடிகை சோனம் கபூர், சில நாட்களுக்கு முன் 5 முறை போட்டோ ஷூட் நடத்தினார். சமீபத்தில் கூட முதல்முறையாக கர்ப்பமான பின் தனது செல்ஃபி போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. 

இந்நிலையில், நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா ஆகியோர் தங்களது ‘பேபிமூனுக்காக’ இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றுள்ளனர். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நடிகை சோனம் கபூர் இத்தாலியில் இருந்து தொடர்ச்சியான படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

Sonam Kapoor Italy Baby Moon Photos went Viral on Instagram

இந்த வீடியோவில் சோனமும் ஆனந்த் அஹுஜாவும் ஒரு உணவகத்திற்கு வந்தனர். உணவகத்தில் அமர்ந்து, ஒரு கிளாஸ் ஜூஸை எடுத்து, "ஒயினுக்கு பதிலாக ஆரஞ்சு ஜூஸ் சாப்பிடுகிறேன்" என்று சோனம் சொல்கிறார். ஆனந்த் ஒரு தண்ணீர் பாட்டிலைக் காட்ட, இருவரும் “தண்ணீர்தான் பெஸ்ட்” என சொல்கின்றனர்.

Sonam Kapoor Italy Baby Moon Photos went Viral on Instagram

இந்த பதிவில் ஆனந்தின் தனி புகைப்படத்தை வெளியிட்ட சோனம், "எனது முழு இதயமும் வாழ்க்கையும்" என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு வீடியோவில், சோனம் கண்ணாடி முன் நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Also Read | நானி & நஸ்ரியா நடிக்கும் புதிய ரொமான்டிக் படம்.. வெளியான CUTE ஆன கலர்ஃபுல் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Sonam Kapoor Italy Baby Moon Photos went Viral on Instagram

People looking for online information on Anand Ahuja, Italy, Italy Baby Moon, Sonam Kapoor, Sonam Kapoor Baby Moon Photos, Sonam Kapoor pregnancy photos will find this news story useful.