CWC 3 : சிவா Friend'னால நடிச்சுட்டான்னு சொன்னாங்க.. SK பேசுனதும் கண் கலங்கிய தர்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், மக்களை முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று 'குக் வித் கோமாளி'.

Dharshan gets emotional after sk speech in cook with comali 3

Also Read | சூப்பர் சிங்கரில் வைரலான ஜப்பான் இசைக்கலைஞர்.. கடைசில DJ-வ பங்கம் பண்ணிய மா.கா.பா.. Wait for the End 😂

முந்தைய இரண்டு சீசன்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது போல, தற்போது மூன்றாம் சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிகள் தான் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹைலைட்.

அசத்தும் நடிகர் தர்ஷன்..

கடந்த சில வாரத்திற்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், வைல்ட் கார்டு என்ட்ரியாக, நடிகர் முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். கனா, தும்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் தர்ஷன், இந்த நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையை நிரூபித்து பல சுற்றுகளில் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரின் பாராட்டுக்களையும் பெற்று அசத்தி உள்ளார்.

சிவகார்த்திகேயன் பகிர்ந்த விஷயம்

இந்நிலையில், கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியின் போது, நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு, தர்ஷனைப் பற்றி பேசி இருந்த வார்த்தைகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர், கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Dharshan gets emotional after sk speech in cook with comali 3

பயமா இருக்கு..

அப்போது தர்ஷன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், "கொரோனா ஊரடங்கு சமயத்தில், சமையலை ஓரளவு தெரிந்து கொண்ட தர்ஷன், முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என தெரிவித்து விட்டார். இதுபற்றி நான் கேள்விப்பட்டதும், தர்ஷனிடம் பேசினேன். எனக்கு சமையல் பற்றி எதுவும் தெரியாது என்றும், அதிகம் பயமாக இருக்கிறது என்றும் தர்ஷன் என்னிடம் கூறினார்.

உன்ன நெனச்சா பெருமையா இருக்கு..

இப்படி ஒரு பெரிய நிகழ்ச்சியில், உன்னை கூப்பிடுகிறார்கள். நீ சென்று விட்டு வா என்று நான்தான் அறிவுறுத்தினேன். அங்கு சென்று தோற்றாலும் பரவாயில்லை. ஏராளாமான மக்கள் உன்னை கவனிப்பார்கள் என்பதால் நிச்சயம் நீ கலந்து கொள்ள வேண்டும் என நான் கூறினேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் ஒன்றிரண்டு வாரங்களில் வந்துவிடுவான் என்று தான் நானும் நினைத்தேன். ஆனால், இங்கு அவன் செய்வதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. உன்னை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது தர்ஷன்.

Dharshan gets emotional after sk speech in cook with comali 3

கனா படத்தில் நடித்தபோது, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவரும் உனது நண்பர்கள். கனா படத்தில் நடித்த போது, எனது நண்பர் என்பதால் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்கள். ஆனால், குக் வித் கோமாளியை பொறுத்தவரை, அந்த அளவு பரிச்சியம் இல்லாத இடம். அதேபோல தெரியாத ஒரு வேலையை எடுத்துக் கொண்டு, கடுமையாக உழைத்து பாராட்டுக்களை தர்ஷன் பெற்று வருவது, எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது" என சிவகார்த்திகேயன் கூறினார்.

இதனைக் கேட்டதும், திடீரென ஆனந்த கண்ணீர் வடித்தார் தர்ஷன். உடனடியாக அங்கு சுற்றியிருந்த அனைவரும் தர்ஷனை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாட, இந்த காட்சியை பார்த்தவர்களும் ஒரு நிமிடம் கலங்கிப் போயினர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Dharshan gets emotional after sk speech in cook with comali 3

People looking for online information on Cook with comali 3, CWC 3, Dharshan, Sivakarthikeyan will find this news story useful.