ஆண் நண்பர் மடியில் அமர்ந்து.. வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்.. "Gym'ல ஒரே Atrocity தான்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான லாபம் என்னும் திரைப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்திருந்தார்.

Shruti haasan work out with her boy friend in gym

இதனைத் தொடர்ந்து, KGF படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே, ஆரம்பித்து விட்டது.

சலார் படத்தைத் தவிர, பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் நாயகி ஆகவும், நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க உள்ளார்.

ஸ்ருதிஹாசன் எப்பவும் ஆக்டிவ்

அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகி உள்ளதும் குறிப்பிடத்த்தக்கது. திரைப்படங்களில் ஸ்ருதிஹாசன் பெரிய அளவில் பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தள பக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தியும் வருகிறார்.

Shruti haasan work out with her boy friend in gym

அதன் படி, வொர்க் அவுட் வீடியோக்கள், வீட்டில் இருந்தபடி செல்லப்பிராணியை கொஞ்சும் பதிவுகள், போட்டோஷூட் என எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். அந்த வகையில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் ஸ்ருதி ஹாசனின் வொர்க் அவுட் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

ஆண் நண்பர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து அடிக்கடி உடற்பயிற்சி மேற்கொள்வதை நடிகை ஸ்ருதிஹாசன் வழக்கமாக கொண்டுள்ளார். இது தொடர்பாக நிறைய இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பதிவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்து வருவார்.

Shruti haasan work out with her boy friend in gym

அந்த வகையில், 'Squats' எடுத்துக் கொண்டு வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் சாந்தனு ஹசாரிகா இடுப்பில் அமர்ந்த படி, ஸ்ருதிஹாசன் இருக்கிறார். இது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Shruti haasan work out with her boy friend in gym

People looking for online information on Salaar, Shruti Haasan, Workout will find this news story useful.