www.garudabazaar.com

Breaking: ஆஹா.. செம்ம Combo-வா இருக்கே! இயக்கப் போகும் டைரக்டர் இவரா?! தரமான சம்பவம் Loading..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Sundar C: இயக்குநர் சுந்தர்.சி-யின் அடுத்த படமும், அதில் இணையவிருக்கும் மல்டி ஸ்டார்கள் குறித்த அப்டேட்ஸ்களும் தெரியவந்துள்ளன.

Breaking jiiva Jai and Srikanth joins in Sundar C next directorial

சுந்தர் சி படங்கள்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்திலான திரைப்படங்கள் பொதுமக்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களாக வெகுஜன ரசிகர்களிடையே வெகுவாக பிரபலமானவை.  முன்னதாக நடிகர் சுந்தர்.சி தம்முடைய தொடர் வரிசை திரைப்படமான ‘அரண்மனை-3’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை குஷ்பூவின் Avni Cinemax தயாரித்திருந்தது.

‘கலகலப்பு’ படங்கள்

இதேபோல் சுந்தர்.சியின் இயக்கத்திலான காமெடியும் கலகலப்புமூட்டும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதுடன், அப்படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். அதிலும் கலகலப்பு என்கிற தலைப்பிலேயே சுந்தர்.சி இயக்கிய திரைப்படங்கள் இன்னும் பிரபலமானவை.

இதன் முதலாம் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானத்தின் ஹாட்ரிக் கூட்டணியும், நேர்த்தியான திரைக்கதையும், சுந்தர்.சியின் பாணியிலான டைரக்‌ஷனும்  இப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியமைத்தது. இப்படத்தின் தொடர்வரிசை படமாக கலகலப்பு படத்தின் 2-ஆம் பாகம் வெளியானது.

எண்டர்டெயின்மெண்ட் என்கிற மேஜிக்

இதில் ஜீவா, ஜெய் மற்றும் மிர்ச்சி சிவா கூட்டணி இப்படத்தில் கைகோர்த்தது. இந்த படத்தின் நடுவில், சிவா பேசும் ஒரு காட்சியில், “இது சுந்தர். சி படம்.. இப்படித்தான் இருக்கும்” என்று அவரே கூறுவார். எனினும் சுந்தர்.சி படங்கள் லாஜிக்கை மறந்து எண்டர்டெயின்மெண்ட் என்கிற மேஜிக்கை கொண்டு சிரிக்கவைப்பவை என்கிற பெயர் ரசிகர்கள் மத்தியில் உள்ளனர்.

சுந்தர் சி-யுடன் இணையும் அடுத்த நடிகர்கள் கூட்டணி

இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் ஒரு புதிய படத்தில் இணைவதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த திரைப்படத்தை குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் இதர பட தகவல்கள்

நடிகர் ஜெய், ‘சிவ சிவா’ என்கிற திரைப்படத்திற்கு முதன் முறையாக இசையமைத்து நடித்து வருகிறார். இதேபோல், நடிகர் ஜூவா, அண்மையில் வெளியான ‘83’ என்கிற கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று PAN INDIA படத்தில் நடித்து அசத்தினார். நடிகர் ஸ்ரீகாந்த், ‘தி பெட்’ எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை அண்மையில் நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

Also Read: ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!..  மாப்பிள்ளை யார் பாருங்க! வெளியான வைரல் Post!

தொடர்புடைய இணைப்புகள்

Breaking jiiva Jai and Srikanth joins in Sundar C next directorial

People looking for online information on Aranmanai 3, Avni Cinemax, Jai, Jiiva, Kalakalappu, Kalakalappu 2, Srikanth, Sundar C, This is 83 will find this news story useful.