வெளியானது 2021-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 5 திரைப்படங்களின் வரிசை பட்டியல்!
முகப்பு > சினிமா செய்திகள்2021-ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகளுக்கான திரைப்படங்களாக டாப் 5 தென்னிந்திய திரைப்படங்களை ட்விட்டர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
அதன்படி விஜய் நடித்த #Master திரைப்படத்தையும், அஜீத் நடித்து வெளிவரவுள்ள #Valimai திரைப்படத்தையும், விஜய் நடிப்பில் உருவாகி வரும் #Beast திரைப்படத்தையும், சூர்யா நடிப்பில் வெளியான #JaiBhim திரைப்படத்தையும், பவன் கல்யாண் நடிப்பில் வெளியான #VakeelSaab படத்தையும் ட்விட்டர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
இந்த தரவரிசை ஜனவரி 1-ஆம் தேதி முதல், நவம்பர் 15-ஆம் தேதி வரை, எத்தனை பயனாளர்கள் இந்த ஹேஷ்டேகுகளை பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை பொறுத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் விஜய் சேதுபதி நடித்திருந்தனர். அனிருத் இசையில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
இந்த வரிசையில் அஜீத் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படம் இடம் பெறுகிறது. இப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் முக்கிய பாடலான அம்மா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்த பட்டியலில் அடுத்து, விஜய் நடிப்பிலான Beast படம் இடம் பெற்றிருந்தது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இரவு நேர படப்பிடிப்பு நேற்றிரவு கூட சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன. முன்னதாக இப்படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு அன்று இயக்குநர் பகிர்ந்த போட்டோ ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.
இதேபோல், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகி விமர்சன உலகில் பேசுபொருளான படம் ஜெய்பீம். மனித உரிமை மீறலையும், காவல்துறையினரின் அதிகாரப் போக்கையும் இப்படம் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் இடம் பெற்ற இன்னொரு படம் தான், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெளியான வக்கீல் சாப். பாலியல் சீண்டலால் பாதிக்கபட்ட பெண்களை குற்றவாளிகளாக்கும் ஆண்களிடம் இருந்து அப்பெண்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் வக்கீலின் கதாபாத்திரம் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஆகும்.
இந்தியில் அமிதாப் பச்சன், தாப்ஸி நடித்து உருவான பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான இந்த படம், தமிழில் அஜீத் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரிலும் ரீமேக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijayakanth Maanagara Kaaval Director Thiyagarajan Dies Chennai
- Jai Bhim And Master Movie Tops Google Search Trends
- Vijayakanth Maanagara Kaaval Movie Director Passed Away
- Valimai Movie FDFS Show Timing Announced By Theatre Owners
- Actor Arun Vijay Started His Dubbing For Yaanai Movie
- Vijay Sethupathi Seenu Ramasamy Maamanithan Teaser Is Out
- Kamalhassan Announced Vijay Tv Biggbosstamil5 Day 63 Elmination
- Plea On Vijay Sethupathi Responds From Actor PRO Side
- Ajith Kumar Valimai Second Single Lyrical Video Is Out Trending
- Big Breaking: Ajith Kumar H Vinoth Valimai TN Distributors
- Actor Ajith Kumar AK 61 HVinoth Movie Breaking Update
- Beast Vijay 29 Years Of Vijayism CDP Released By Master Producer
தொடர்புடைய இணைப்புகள்
- "Rowdy-களால் வாழ்க்கையே போய்டுச்சு!" 22 அடி பிரம்மாண்ட திருப்பாச்சி அருவா செஞ்ச கை இன்னைக்கு..
- IKK Movie REVIEW | JAI BHIM MANIKANDAN, Guru Somasundaram, Y Gee Mahendra, Bhagyaraj
- கைவிட்ட காதலன் மீது புகார் அளிக்க வந்த பெண். விசாரணை என்ற பெயரில் சீரழித்த SI
- 😍 முதல் முகம் நீ... Valimai Emotional Mother Song | AK, Ajith Kumar
- எல்லா Theatre-லயும் எல்லா Shows-ம் பாப்பேன் 🔥 Ajith Fans | Valimai
- "ரசிகர்கள் சண்டையிலேயே முடிந்த வாழ்க்கை..!" -'தல -யா..? A K -வா..?'
- "எப்பவுமே எங்களுக்கு 'தல' அஜித் தான்..!" -'தல -யா..? A K -வா..?'
- இது Pure Vijayism🔥சொல்லி அடிக்குறதுல கில்லி! தமிழ் சினிமாவின் வாத்தி! Box Office-ன் Master..!❤️😍
- 'Suriya வைத்த அதிரடி Status' சூசகமாக உணர்த்துவது என்ன? "இது நமது சுதந்திரம்.." வைரலாகும் Post
- "போதும் Sir..! இதுக்கு மேல நாங்க தாங்கமாட்டோம்..!" -'தல -யா..? A K -வா..?'
- ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையா அஜித்..? -'தல -யா..? A K -வா..?'
- "தேவையில்லாத சண்டை வேணான்னு நெனச்சிருப்பாரு..!" -'தல -யா..? A K -வா..?'