www.garudabazaar.com

வலிமை உடன் போடு வெடிய.. அஜித் ரசிகர்களுக்கு இன்றே காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் " வலிமை". இப்படத்தின் ஆல்பம் இன்று விரைவில் வெளியாகபோவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Actor Ajith kumar valimai movie album out today

எதிர்பார்ப்பில் வலிமை

நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  படத்தின் ரிலீஸ் தேதியாக 2022 ஜனவரி 13 என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Actor Ajith kumar valimai movie album out today

வலுவான கூட்டணி

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்தின் தோழியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Actor Ajith kumar valimai movie album out today

அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பு காரணமாக, தமிழக அரசு 2021 ஆகஸ்ட் முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தது. அதன் பிறகு, 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் 1 முதல் ஜனவரி 10 வரை தமிழக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வலிமை படத்திற்கு சிக்கல் எழுமோ என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகி ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் ஆல்பம் இன்று விரைவில் வெளியாகபோவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. மற்ற பாடல்கள் ஜனவரி 13  வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் பல முறை கூறிவந்த நிலையில், இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith kumar valimai movie album out today

People looking for online information on AjithkumarValimai, Valimai, ValimaiAlbum will find this news story useful.