www.garudabazaar.com

குக் வித் கோமாளி "புகழ்" பகிர்ந்த வேற மாரி புகைப்படம்.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: குக் வித் கோமாளி "புகழ்" அஜித்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார். அதனால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் புகழ், அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

 

cook with comali fame pugazh shared a photo with Ajith kumar

வலிமை வரவேற்பு

நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  படத்தின் ரிலீஸ் தேதியாக 2022 ஜனவரி 13 என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

cook with comali fame pugazh shared a photo with Ajith kumar

செம கூட்டணி

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்தின் தோழியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

cook with comali fame pugazh shared a photo with Ajith kumar

பூரிப்பில் புகழ்

இப்படத்தின் ஆல்பம் இன்று விரைவில் வெளியாகபோவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்ததை தொடர்ந்து, இப்படத்தில் நடித்த விஜய் டிவி குக் வித் கோமாளி "புகழ்" அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைத்தளபக்கத்தில் பதிவு செய்துள்ளார். அடந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது, "அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல.. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.. என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ் " என்று பதிவிட்டுள்ளார்.

 

cook with comali fame pugazh shared a photo with Ajith kumar

People looking for online information on Ajithkumar, Cookwithcomalipugazh, Pugazh, Valimai, ValimaiAlbum will find this news story useful.