www.garudabazaar.com

ஆஸ்காருக்கு அடுத்த உலகின் மிகப்பெரிய விருதுக்கு தகுதி பெற்ற ஜெய்பீம்! மாஸ் ஆன தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

suriya Jai Bhim movie nominated for golden globe awards

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.

suriya Jai Bhim movie nominated for golden globe awards

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றியுள்ளார்.

suriya Jai Bhim movie nominated for golden globe awards

ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது, படத்தின் காலண்டர் சர்ச்சை குறித்து பாமக கட்சி சார்பில் அன்புமனி MP அறிக்கை வெளியிட்டார்.இதற்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். இச்சம்பவம் வடதமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

suriya Jai Bhim movie nominated for golden globe awards

இந்நிலையில் ஜெய்பீம் படம் கோல்டன் குளோப் விருதுக்கு ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் இந்தியா சார்பாக இடம் பெற்றுள்ளது. கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2022 ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

suriya Jai Bhim movie nominated for golden globe awards

People looking for online information on Golden Globe, Jai Bhim, Suriya will find this news story useful.