தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தின் சென்னை சிட்டியில் வசூல் இவ்வளவா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 04, 2019 02:07 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் Behindwoods-ன் கணக்கீட்டின் படி பிகில் திரைப்படம் சென்னை சிட்டி பாக் ஆபிஸில் 10 நாட்களில் ரூ. 10.76 கோடி வசூலித்துள்ளது. தற்போது இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Tags : Bigil, Box Office Collection, Vijay