'பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்காதது ஏன்..?' - பிக் பாஸ் 3 பிரபலம் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 04, 2019 01:58 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 105 நாட்கள் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகென் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதனை கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலான பிரபலங்கள் கலந்துக் கொண்ட நிலையில், ரேஷ்மா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இதனிடையே, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இயக்குநர் மணிராம் மற்றும் இணை இயக்குநர் அசோக் உடன் ஷூட்டிங்கில் இருக்கிறேன். இந்த டீம் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த டீமில் இருக்க அனைவரும் என்னுடம் மிகவும் நட்புடன் பழகுகிறார்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த போஸ்ட்டில் ரசிகர் ஒருவர் ‘ஏன் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை’ என கேள்வி எழுப்பியிருந்ததையடுத்து, ஷூட்டிங்கில் இருந்ததால் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என ரேஷ்மா பதிலளித்துள்ளார்.