போடுடா வெடிய...!தளபதி விஜய்யின் 'பிகில்' லேட்டஸ்ட் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் Update
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 02, 2019 10:43 AM
தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி - தளபதி விஜய் இணைந்துள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது.

பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்னர்.இந்நிலையில் இப்படம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் முதல் 8 நாட்களில் ரூ.9.39 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது