பிரபல இயக்குநருடன் அருண் விஜய் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 03, 2019 06:56 PM
தடம் படத்துக்கு பிறகு அருண் விஜய் 'மாஃபியா' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க, லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இதனையடுத்து நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் படங்களின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இது நடிகர் அருண் விஜய்யின் 30வது படமாகும்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பலக் லால்வாணி நடிக்கிறார். சபீர் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்துக்கு சினம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.இந்த படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் சார்பாக விஜய்குமார் தயாரிக்கிறார்.
Pleased to present the 'Title look' of @arunvijayno1 starrer #SINAM produced by Movie Slides Pvt Ltd. Good luck brother!@gnr_kumaravelan #AV30Title @gopinath_dop @shabirmusic @silvastunt @madhankarky @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/EmTb8Po9IG
— Actor Karthi (@Karthi_Offl) November 3, 2019