“விஜய்யும் ரஜினியும்தான் என்னோட…” ஆடியோ வெளியீட்டில் மாஸ் காட்டிய ‘லெஜண்ட்’ சரவணன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சரவணன் அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.

Legend saravanan said vijay Rajini his role model

பிரம்மாண்ட அறிமுகம்…

நடிகர் சரவணன் நடிப்பில் ஜேடி –ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் இயக்கும் புதிய படத்துக்கு ’தி லெஜண்ட்’ என்று பெயர் வைக்கபப்ட்டுள்ளது. இது சரவணனின் முதல் திரைப்படமாகும்.  இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.

Legend saravanan said vijay Rajini his role model

கலைஞர்கள்…

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கியுள்ளன. படத்தின் முன்னோட்டமாக சில போஸ்டர்களும் மோஷன் போஸ்டர்களும் மற்றும் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றன.

Legend saravanan said vijay Rajini his role model

டிரைலர் & ஆடியோ…

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் மே 29 ஆம் தேதி (நேற்று) மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளான தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாத்தி, நுபுர் சனோன், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ராய்லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு நடனமாடினர்.

ரோல்மாடல்….

இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகர் சரவணன். அப்போது பத்திர்க்கையாளர்களின் பல கேள்விக்கு பதிலளித்த சரவணன் “முதல் படமே இவ்வளவு பிரம்மாண்டமாக அமைந்தது கடவுளின் ஆசிதான். இந்திய சினிமாவே எடுத்துகாட்டாக சொல்லுமளவுக்கு இந்த படம் வந்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில், பேன் இந்தியா திரைப்படத்துக்கு உரிய தரத்தோடு எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் என்னுடைய ரோல்மாடல்கள் விஜய் சாரும், ரஜினி சாரும்தான். அடுத்தடுத்து நல்ல கதையம்சத்தோடு வரும் இயக்குனர்களோடு பணியாற்றுவேன்.” என்று பேசியுள்ளார். முன்னதாக இந்த நிகழ்வுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் வந்து கலந்துகொண்டு படத்தைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.

Legend saravanan said vijay Rajini his role model

“விஜய்யும் ரஜினியும்தான் என்னோட…” ஆடியோ வெளியீட்டில் மாஸ் காட்டிய ‘லெஜண்ட்’ சரவணன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Legend saravanan said vijay Rajini his role model

People looking for online information on Harris Jayaraj, Legend Saravanan, The legend will find this news story useful.