KGF 2 ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது? அமேசான் ப்ரைம் வெளியிட்ட ‘மாஸ்’ Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF 2 படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

KGF 2 OTT Streaming date announced

Also Read | விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதபாத்திரம்… Mass போஸ்டரோடு வெளியான தகவல்

KGF 2…

கேஜிஎஃப் சாப்டர் 1-க்குக் கிடைத்த வெற்றியை அடுத்து ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’.  யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியானது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. திரையரங்குகளில் மொழி வித்தியாசம் இல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களும் இந்த படத்தைக் கொண்டாடித் தள்ளினர்.

KGF 2 OTT Streaming date announced

1000 கோடியை தாண்டிய வசூல்…

கேஜிஎப் 2 திரைப்படம் பாகுபலி 2 மற்றும் RRR படங்களைப் போலவே வசூலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வெளியானது முதலே அங்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து படத்தைப் பார்த்து வருகின்றன. ரிலீஸாகி இன்று நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையிலிம் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதன் மூலம் ‘All time blockbuster’ படங்களில் ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

KGF 2 OTT Streaming date announced

ஓடிடியில் KGF…

இந்த படம் சில நாட்களுக்கு முன்னதாக ப்ரைம் வீடியோ தளத்தில்  Early Rental வசதியோடு கிடைத்தது. இதையடுத்து தற்போது ப்ரைம் வீடியோவில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | ”ஹரி சார் upgrade ஆகிட்டாரு… இது 2.0”… யானை Press Meet-ல் பிரியா பவானி சங்கர் பகிர்ந்த சீக்ரெட்!

தொடர்புடைய இணைப்புகள்

KGF 2 OTT Streaming date announced

People looking for online information on KGF 2 OTT, KGF2, Yash will find this news story useful.