விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த கொலைகாரன்' திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்து ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'கொலைகாரன்' படத்தை தயாரித்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரதீப்குமார், கமல் போத்ராவும், இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த தனஞ்செயனும் இணைந்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளனர். இந்த படத்திலும் விஜய் ஆண்டனியே ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'கோலிசோடா', '10 எண்றதுக்குள்ள' 'கோலிசோடா 2' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படமும் 'கொலைகாரன்' படம் போலவே ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, டையூ, டாமன் போன்ற பகுதிகளில் நடைபெறவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் தொடங்கவிருப்பதாகவும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுன் ஒரு இளம் பிரபல ஹீரோவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களை இயக்குனர் விஜய் மில்டன் தேர்வு செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது