பிகில் Audio Launch - பிகிலு போடலாமா..? கெத்தா எண்ட்ரி கொடுத்த தளபதி விஜய்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 19, 2019 06:32 PM
நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த நடிகர் விஜய்யை அரங்கில் இருந்த அவரது ரசிகர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் தங்களது தளபதியை ஆராவாரம் செய்து வரவேற்றனர். கருப்பு நிற சட்டை அணிந்து அலட்டிக் கொள்ளாமல் ரசிகர்களின் அன்புக்கு தனது புன்னகையால் நன்றி சொல்லிவிட்டு விஜய் தனது இருக்கையில் அமர்ந்தார்.
விஜய்யின் எண்ட்ரியை தொடர்ந்து, அவரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சுவாரஸ்ய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இணைந்திருங்கள்.