KAAPAN USA OTHERS

பிகில் Audio Launch விழாவில் தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திட்ரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Bigil Audio Launch Football Jersys issued to Thalapathy fans

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி சீட்டுடன் வந்துள்ள ரசிகர்களுக்கு, பிகில் திரைப்படத்தின் சிவப்பு நிற கால்பந்து அணியின் ஜெர்சி டி-ஷர்ட் மற்றும் மஞ்சள் நிற பிகிலு சத்தம் எழுப்பும் விசில் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இசை வெளியீட்டு விழா மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.