கையில கத்தி! நெருப்பு சுத்தி..! வெறித்தனம் காட்டும் தளபதி விஜய்யின் பிகில் போஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 17, 2019 06:12 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி, சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து பரவிய வதந்திக்கு படத் தயாரிப்பு தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்கப்போகும் அந்த ஆகச்சிறந்த நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#Verithanam 🔥🔥🔥 #Bigil ♥️ #BIGILAudioFromSept19 @Ags_production @actorvijay @Atlee_dir @arrahman #Nayanthara @am_kathir @dop_gkvishnu @muthurajthangvl @gopiprasannaa @Lyricist_Vivek @Screensceneoffl @SonyMusicSouth pic.twitter.com/30eoCKjHnO
— Archana Kalpathi (@archanakalpathi) September 17, 2019