தளபதி விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்குகிறேனா? - இயக்குநர் பேரரசு விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 18, 2019 05:50 PM
தளபதி விஜய் தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயிமென்ட் தயாரித்துள்ள 'பிகில்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 64' படத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் பேரரசு இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் ஒரு விழாவில் ஜாக்குவார் தங்கம், விஜய் படத்தை இயக்கவிருக்கும் பேரரசுவிற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் பரபரப்பானது.
இதனையடுத்து பேரரசு இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் 65 படத்தை பேரரசு இயக்கப்போவதாக பத்திக்கையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அச்செய்தி தொடர்ந்து வந்து தற்பொழுது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது.
நான் திரு. விஜய் அவர்களுக்காக கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை,. நானும், என் கதையும் திரு. விஜய் அவர்களுக்காக காத்திருக்கிறோம் என்பதும் உண்மை! மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை!
இச்செய்தி உண்மையிலேயேஉறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.