பிக்பாஸ் குடும்பத்தின் பைனல்ஸ கொண்டாட்டம்... கலந்துகொண்ட லாஸ்லியா... வைரல் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

biggboss4tamil party video goes viral பிக்பாஸ் குடும்பத்தின் பைனல்ஸ கொண்டாட்டம்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. தற்போது ஹர்பஜன் சிங் உடன் 'ப்ரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ் போன்ற பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில் அடுத்ததாக ஆரியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கொண்டாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு  போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரி, பாலா, ரம்யா, கேபி, வேல்முருகன்  உட்பட போன்ற அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி மகிழ்வதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் அந்தக் கொண்டாட்டத்தில் லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்  நேற்றைய தினம் கடந்த சீசன் போட்டியாளர்களான கவின், ஷெரின், முகேன் போன்றோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்து இந்த சீசனில் உள்ள போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் லாஸ்லியாவின் ரசிகர்களும் அவரை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் குடும்பத்தின் பைனல்ஸ கொண்டாட்டம்... கலந்துகொண்ட லாஸ்லியா... வைரல் வீடியோ...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

biggboss4tamil party video goes viral பிக்பாஸ் குடும்பத்தின் பைனல்ஸ கொண்டாட்டம்

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.