நட்சத்திர தம்பதிகளான நடிகர் விஜய்குமார் - மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா, தளபதி விஜய்யுடன் 'சந்திரலேகா' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். பீட்டர் பால் திரைப்பட இயக்குநர் என்று குறிப்பிட்டுள்ள அவர், அவர்களது திருமணம் அவரது மகள்களின் அனுமதியுடன் தான் நடைபெறுகிறது என்பதையும் பதிவு செய்துள்ளார். மேலும், திருமணம் நெருங்கிய நண்பர்களுடன் எளிமையாக நடைபெறுகிறுவதால், திருமண நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை திருமணத்திற்கு பிறகு வெளியிடுவதாக உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவரது மகள் ஜோவிகா, ''நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். உங்களுடன் இருந்த இந்த 15 வருடங்களும் சிறப்பாக இருந்தது.
உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வழியில் வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் நிச்சயம் தகுதியானவர். நான் இதனை உங்கள் மகளாகவும், நண்பியாகவும் சொல்கிறேன். வாழ்த்துகள் மா'' என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த வனிதா, ஜோவிகா, நீ என்னை அழ வைத்து விட்டாய். அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றிலும் எனக்கு துணை நின்றதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீயும் ஜெயாவும் என்னுடன் இருப்பது போதும். மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை. நீ என்னுடைய பாகுபலி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vanitha's Daughter Jovika Reacts To Her Mother's Wedding Announcement With Peter Paul
- பிக்பாஸ் நடிகை வனிதாவிற்கு திருமணம் Biggboss Vanitha Vijayakumar Going To Marry A Filmmaker
- Bigg Boss 3 Vanitha Vijayakumar To Get Married Soon To This Filmmaker
- பிரபல நடிகரின் மகன் லாக்டவுனில் திருமணம் Popular Actors Son Marriage Happens In Corona Lockdown
- Hansika Tweets About Her Marriage Allegations | ஹன்சிகா திருமணம் குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம்
- : T Rajendar’s Latest Breaking Statement About Simbu’s Marriage
- நடிகர் ராணா திருமண தேதி அறிவிப்பா குஷியில் ரசிகர்கள் Actor Rana Marriage May Take Place During This Date
- Marriage Date Of Rana Daggubati And Mihika Bajaj Maybe On This Date
- Bigg Boss 3 Meera Mitun Posts Bridal Look And About Marriage
- Bigg Boss Tamil 3 Meera Mitun Shared About Her Marriage
- கல்யாணம் பற்றி மனம் திறந்த ஷெரின் | Actress Sherin Opens On Her Marriage Plan , Dhanush And Her Crush
- Varalaxmi Sarathkumar Puts A Fullstop About Her Marriage Rumours
தொடர்புடைய இணைப்புகள்
- Cooku With Comali-ல Bala & Shivaangi ரொம்ப பிடிக்க காரணம் இதான் - Vanitha's Super Fun Interview
- "என் அப்பா கிடைச்சுட்டாரு" - Vanitha & Bala Live From Cooku With Comali Season Finale !
- LOL🤣 'Bala-வ தள்ளிட்டு Ramya Pandiyan-அ புடிச்சிட்டான் Pugazh' - Dhamu's Fun-Filled Interview
- YogiBabu Marriage - Photos
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- Strategy | Gurunadhaa! Here Are Popular Words That Bigg Boss Tamil 3 Gave Us! - Slideshow
- வனிதா ரீஎண்ட்ரி | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow
- மதுமிதா - வனிதா | காதல் பாதி சண்டை பாதி கலந்து செய்த பிக் பாஸ்-ன் Best Promo வீடியோ - Slideshow
- “Vanitha ஓட Secrets-அ நான் சொன்ன...” Sherin | Bigg Boss
- Sherin Shringar | Ajith's Birthday Wishes, Checkout Who Has Wished Him! - Slideshow
- Sherin Shringar
- Losliya