'அந்த பிக்பாஸ் நடிகருடனான திருமண வாழ்க்கை.. தவறு என் மீதுதான்'' - காஜல் பசுபதி பளீச்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் பசுபதி தனது திருமண வாழ்க்கை குறித்து ட்விட்டரில் மனம் திறந்து பதிவிட்டுள்ளார். 

திருமண வாழ்க்கை குறித்து பிக்பாஸ் நடிகை பளீச் | biggboss fame actress kaajal pasupathi opens on her relationship with master sandy

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் காஜல் பசுபதி. இவர் மௌனகுரு, கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கும் நடன இயக்குநர் சாண்டிக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டில் விவாகரத்து ஆனது. 

இந்நிலையில் காஜல் பசுபதி தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். காஜல் பசுபதியின் முன்னாள் கணவரான சாண்டிக்கு, அவர் மனம் புண்படும் விதமாக இணையவாசி ஒருவர் ஒரு கருத்தை தெரிவித்தார். இதையடுத்து அந்த கருத்தை பதிவிட்டவருக்கு பதிலளித்த காஜல் பசுபதி, ''கடவுளே, அவர்களை தனியாக விடுங்கள். எத்தனை முறை சொல்வது, அதில் தவறு என் மீதுதான். நாங்கள் 2012-லேயே பிரிந்துவிட்டோம். எங்கள் பிரிவில் சாண்டியின் மணைவிக்கு எந்த சம்பந்தமுமில்லை. இப்போது அவர் என் கணவரும் இல்லை'' என பளீச் பதில் கொடுத்துள்ளார். மேலும் ஏன் இப்படி அடுத்தவர்களின் பர்சனல் விஷயங்களில் தலையிடுகிறார்கள் என தெரியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார் காஜல் பசுபதி. 

 

தொடர்புடைய செய்திகள்

திருமண வாழ்க்கை குறித்து பிக்பாஸ் நடிகை பளீச் | biggboss fame actress kaajal pasupathi opens on her relationship with master sandy

People looking for online information on BIGGBOSS TAMIL, Kaajal Pasupathi, Sandy will find this news story useful.