EXCLUSIVE - ''பாக்ஸர் படத்தில் எங்களுக்கும் அருண் விஜய்க்கும்...'' - பளீச்சென உடைத்த தயாரிப்பாளர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் வி.மதியழகன் மனம் திறந்து பேசியுள்ளார். 

பாக்ஸர் படத்தில் என்ன பிரச்சனை.? தயாரிப்பாளர் பளீச் | producer v mathiyalagan opens on arun vijay's boxer and his relationship with him

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் விஜய். இவர் அண்மையில் நடித்த தடம், மாஃபியா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இவர் தற்போது அறிவழகன் இயக்கும் தனது 31-வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரித்திகா சிங்குடன் பாக்ஸர் படத்திலும் நடித்து வருகிறார். 

இதனிடையே அண்மையில் அருண் விஜய்க்கும் பாக்ஸர் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் வி.மதியழகனிடம் பேசிய போது, ''பொய்யான செய்திகள் காட்டுத்தீ போல பரவுகின்றன. அதுபோல என்ற பிரச்சனையும் எங்களுக்குள் இல்லை. இந்த ஊரடங்கு போடப்படுவதற்கு முன்பு கூட நாங்கள் சந்தித்து பேசினோம். சீக்கிரமே லாக்டவுனுக்கு பிறகு ஷூட்டிங் செல்லும் அனுமதி கிடைத்தவுடன்,  படப்பிடிப்புக்கு செல்கிறோம்'' என தெரிவித்தார். இதன் மூலம் பாக்ஸர் படம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

பாக்ஸர் படத்தில் என்ன பிரச்சனை.? தயாரிப்பாளர் பளீச் | producer v mathiyalagan opens on arun vijay's boxer and his relationship with him

People looking for online information on Arun Vijay, Boxer, Mathiazhagan will find this news story useful.