வாவ்.. போடு வெடிய!!.. ஒரே படத்தில் இணையும் இரண்டு "முக்கிய" பிக்பாஸ் பிரபலங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் N.T.நந்தா இயக்கத்தில் துர்வா,  சினேகன், சாக்‌ஷி அகர்வால், பிரனய், ஷிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘குறுக்கு வழி’.

BiggBoss Snekan and Sakshi Agarwal in Kurukku Vazhi movie

ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் ‘வல்லதேசம்’ படத்தை இயக்கிய இயக்குனர் N.T.நந்தா, இந்த படத்திற்கு பிறகு இயக்கும் இரண்டாவது படம் ‘குறுக்கு வழி’.

‘சூப்பர் டூப்பர்’ எனும் படத்தில் நாயகனாக நடித்த நடிகர் துர்வா, பிரனய் இப்படத்தின் நாயகர்களாக நடிக்க பிக்பாஸில் பங்கேற்ற நடிகை சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் சினேகனும் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர்களுடன் தீபன், ஷிரா, மிப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒளிப்பதிவு செய்து N.T.நந்தா இயக்க,  AIM சதீஷ் மக்கள் தொடர்பு பணிகளை கவனித்துக்கொள்கிறார். சில தினங்களுக்கு முன்புதான், பூஜையுடன் ‘குறுக்கு வழி’ படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

கவிஞர் சினேகன் ‘பாண்டவர் பூமி’ திரைப்படம் தொடங்கி கழுகு, ஆடுகளம், சூரரைப்போற்று என பல முன்னணி ஹீரோக்கள் நடித்த வெற்றித் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கில் ஹிட் பாடல்களை எழுதிய பாடலாசிரியராகவும், திரைத்துறை நடிகராகவும் பிரபலமாக அறியப்படுபவர்.

குறிப்பாக விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான சினேகன், பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து செயலாற்ற தொடங்கினார். அண்மையில் இவர் பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் கமல்ஹாசனின் முன்னிலையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து  கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் சினேகன், இந்த ‘குறுக்கு வழி’ என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னதாக ‘உயர்திரு 420’ என்கிற திரைப்படத்தில் சினேகன் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசனில் கலந்து கொண்ட நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது இப்படத்தில் நடித்து வருகிறார். சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தோன்றி, மக்களிடையே ரீச் ஆனார்.

அண்மையில் ராய் லட்சுமி நடித்து வெளியாகியுள்ள சிண்ட்ரல்லா எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார்.

இப்படி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் சினேகன் மற்றும் அதே பிக்பாஸில் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த சாக்ஷி அகர்வால் இருவரும், ‘குறுக்கு வழி’ ஒரே திரைப்படத்தில் இணைவது என்பது ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Also Read: போடு!! "BiggBoss 5வது சீசன் ஹவுஸ்மேட்ஸ் இவங்கலாம் தானா?".. வைரல் ஆகும் யூக பட்டியல்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Snekan and Sakshi Agarwal in Kurukku Vazhi movie

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, KurukkuVazhi, Sakshi Agarwal, Snekan, Trending, Valladesam, VijayTelevision will find this news story useful.