www.garudabazaar.com

"போடு ரகிட.. ரகிட".. BiggBoss சீசன் 5 நிகழ்ச்சியை ஆடியன்ஸ் நேரில் பார்க்க அனுமதி? இதுதான் Rule-ஆ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சென்சேஷனலாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ.

Kamal Haasan vijay tv BiggBoss5 rules for live audience

இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ள இந்நிகழ்ச்சியின் 5வது சீசனை முன்னிட்டு அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியாகின. அதன்படி, ஒரு திருமண விசேஷ வீட்டுக்குள் கலகத்தில் முடியும் குடும்ப சண்டை தொடர்பான ப்ரோமோ, பின்னர் “யாரது.. யாரது கிசுகிசுனு பேசுறது?” என்று கமல் கேட்பது போல் வெளியான ப்ரோமோ, இறுதியாக .. “அடடே.. வாங்க.. வாங்க” என்று கமல் சொல்லும் இன்னொரு வேற லெவல் ப்ரோமோ என அடுத்தடுத்து வெளியாகின.

Kamal Haasan vijay tv BiggBoss5 rules for live audience

இந்த நிகழ்ச்சியின் ஹவுஸ்மேட்ஸ் எனப்படும் போட்டியாளர்கள் உலக தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் தங்குவார்கள். இவர்களில் வாரத்துக்கு 2 பேர் சக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்.

பொதுமக்களின் வாக்கெடுப்பை வைத்து வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர். தங்கள் இயல்புக்காகவும் நேர்மைக்காகவும் மக்களின் வாக்குகளை பெற்று இறுதியில் அவர்கள் வெற்றியாளராகின்றனர்.

Kamal Haasan vijay tv BiggBoss5 rules for live audience

முதல் சீசனில் 19 போட்டியாளர்கள், சீசன் 2, சீசன் 3 மற்றும் சீசன் 4 ஆகியவற்றில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், 2வது சீசனில் ரித்விகா, 3வது சீசனில் முகேன் ராவ், 4வது சீசனில் ஆரி வெற்றி பெற்றனர். முதல் சீசன் 98 நாட்களும், 2,3,4 ஆகிய சீசன்கள் 105 நாட்களும் நடந்தன.

Kamal Haasan vijay tv BiggBoss5 rules for live audience

இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பார்வையாளர்களுக்கு நேரடியாக நிகழ்ச்சியைக் காண அனுமதி வழங்கப்படுகிறது. பிக்பாஸ் 4வது சீசனில் கொரொனா காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் பிக்பாஸ் 5வது சீசனில் பார்வையாளர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்தப்படவிருப்பதாக தெரிகிறது. வார இறுதியில் கலம்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பதை அகம் டிவி வழியே வீட்டுக்கள் நடந்ததை வறுத்தெடுப்பார். இதையெல்லாம் நேரடியாக பார்க்கும் பார்வையாளர்களுக்கு வேறலெவல் அனுபவமாக இருக்கும்.

Kamal Haasan vijay tv BiggBoss5 rules for live audience

அதன்படி இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு கொரோனா  வழிமுறைகளை பின்பற்றுவதுடன், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம். பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3-ஆம் தேதியில் இருந்து, மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Also Read: ‘நாய் சேகர்’-ஐ அறிமுகப்படுத்திய படத்தின் அடுத்த பார்ட்! இயக்குகிறார் ‘தல’ பட இயக்குநர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan vijay tv BiggBoss5 rules for live audience

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil4, BiggBossTamil5, Kamal Haasan will find this news story useful.