www.garudabazaar.com

நடிகர் பிரபு!! எப்படி இருந்த மனுசன்.. அப்படியே “சின்னத் தம்பியாவே” மாறி இருக்காப்ள! Viral ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிப்பு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு. சிவாஜி கணேசனுடன் இணைந்து பல திரைப் படங்களில் நடித்திருக்கும் பிரபு, பின்னாட்களில் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இளைய திலகம் என்று அன்போடு அழைக்கப்படத் தொடங்கினார்.

actor prabhu new young look viral photo trending பிரபு

தொடர்ந்து எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து, பல விதமான கேரக்டர்களை திரைப்படங்களில் பிரதிபலித்து, கிட்டத்தட்ட 80-களில் இருந்து 2000-ம் ஆண்டுகள் வரை முன்னணி ஹீரோவாக மக்களிடையே திகழ்ந்தவர் நடிகர் பிரபு. இன்றும் அதே எனர்ஜி உடனும் அதே உடல்மொழியுடனும் நடிகர் பிரபு நடித்து வந்தாலும் பழைய பிரபுவை காண்பதற்கு பலரும் ஆவலாக இருந்தனர்.

actor prabhu new young look viral photo trending பிரபு

அதனை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது நடிகர் பிரபு சற்று உடல்மெலிந்து கிட்டத்தட்ட சின்னத்தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நாம் பார்த்த தோற்றத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

actor prabhu new young look viral photo trending பிரபு

அண்மையில், நடிகை குஷ்புவும் இதேபோல் உடல்மெலிந்த தோற்றத்தில், ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடித்தது போலவே இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வந்தன. இந்நிலையில் இளைய திலகம் பிரபுவும் சற்றே இளமையாக காட்சியளிக்கும் இந்த புகைப்படம் பரவி வருகிறது.

actor prabhu new young look viral photo trending பிரபு

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “அப்படியே சின்னத்தம்பி பிரபு போலவே இருக்கிறாரே?” என்று கூறி வருகின்றனர். தற்போது பிக்பாஸ் புகழ் முகின் ராவ் நடிக்கும் வேலன் திரைப்படத்தில் பிரபு நடித்திருக்கிறார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

Also Read: கலர்ஃபுல் ‘ஆடையில்’ தெறிக்கவிடும் நடிகை அமலா பால் .. Trend ஆகும் மிரட்டலான புதிய ஃபோட்டோஷூட்!

தொடர்புடைய இணைப்புகள்

actor prabhu new young look viral photo trending பிரபு

People looking for online information on ChinnathambiPrabhu, Prabhu, Trending, Viral will find this news story useful.