www.garudabazaar.com

‘வெய்ட்டிங் நெல்சன்..’.. ‘வெல்கம் சார்!’.. Public-ஆக பேசிக்கொண்ட தளபதி65 - தளபதி66 பட இயக்குநர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் பீஸ்ட்.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்தார்.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். முன்னதாக நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் ஆகிய திரைப்படங்களை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார்.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

டாக்டர் திரைப்படம், வரும் அக்டோபர் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக தகவல்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தளபதி65 திரைப்படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.

இதனிடையே தளபதி66 திரைப்படம் தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கின. உடனே ரசிகர்கள் தளபதி66 திரைப்படம் தொடர்பான அறிவிப்புக்காக காத்திருந்தனர். அந்த வகையில் கார்த்தி - நாகார்ஜூனா நடித்த ‘தோழா’ திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி, தளபதி66 திரைப்படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டு வந்தது.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

இந்நிலையில் இந்த தகவலை மெய்ப்பிக்கும் வகையில் தளபதி66  திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியிட்டிருந்தனர். அதன்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் தளபதி66 திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

மேலும் இதர படக்குழுவினர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ட்விட்டரில் தளபதி66 திரைப்பட இயக்குனர் வம்சி பைடிபல்லிக்கு தளபதி65 திரைப்பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்து இருந்த வம்சி பைடிபல்லி , “நன்றி நெல்சன் .. பீஸ்ட் திரைப்படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

இதற்கு மீண்டும் பதில் அளித்திருக்கும் நெல்சன் திலீப்குமார், வெல்கம் சார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி தளபதி65 மற்றும் தளபதி66 திரைப்பட இயக்குனர்கள் ட்விட்டரில் நேரடியாக பேசிக்கொண்டிருந்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய குஷியை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு படங்களுமே மரண மாஸ் திரைப்படங்கள் என்கிற நிலையில் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

‘பீஸ்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் தளபதி65 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

இந்த திரைப்படத்துக்கு ஜானி மாஸ்டர் நடனப் பயிற்சி அளிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "விஜய் அப்பா, அம்மாவ Gate-ல wait பண்ண வெச்சாரா?" - வார இதழ் பேட்டி குறித்து S.A.சந்திரசேகர் விளக்கம்.. Video

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy65 and Thalapathy66 directors trending conversation

People looking for online information on Nelson Dilipkumar, Thalapathy65 Thalapathy66, ThalapathyVijay, Vamshi Paidipally, Vijay will find this news story useful.