www.garudabazaar.com

"குழந்தைக்காக விடுறேன்!".. "இல்லனா என்ன பண்ணுவ?" - நெட்டிசன்களுக்கு பாலாஜி மனைவி நித்யா பதிலடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன், தற்போது தொடங்கியிருக்கிறது. இதனால் பிக்பாஸ் கொண்டாட்டமும் களைகட்டி இருக்கிறது.

BiggBoss Balaji wife nithya replies for social media comments

அக்டோபர் 3-ஆம் தேதி முதல், மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீசன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படவிருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்றவர்தான் நடிகர் பாலாஜி. நடிகராக பல முன்னணி திரைப்படங்களில், முன்னணி நகைச்சுவை நடிகர்களுடனும், ஹீரோக்களுடனும் இணைந்து நடித்த பாலாஜி, விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் முக்கியமான பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

அவருடைய மனைவிதான் நித்யா. நித்யா தற்போது சோஷியல் மீடியாவில் தனக்கு வந்த அநாகரிகமான கமெண்ட்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த பதிலடி மிகவும் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் சற்றே ஆக்டிவாக இருக்கும் நித்யா, தற்போது தன்னுடைய மகளுடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இதற்கு ஹேட்டர்ஸ் சில பேர் அநாகரிகமான கமெண்ட்களை கொடுத்து வந்துள்ளனர்.

அப்படி வலைதள வாசி ஒருவர், “இந்த மாதிரி எல்லாம் ஏன் ஆடுகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்து இருக்கும் நிதியா, “அதை நான் முடிவு செய்து கொள்கிறேன்!” என்று பதிலளித்திருக்கிறார். மேலும் சில அநாகரிகமான கமெண்டுகளை அந்த நபர்கள் கொடுக்கவே அதற்கும் காட்டமான பதிலடியை கொடுத்திருக்கிறார் நித்யா.

அதன்படி இன்னொரு நபர் ஒருவர், “உங்கள் குழந்தைக்காகதான் உங்களை சும்மா விடுகிறேன்” என்று சொல்ல, “இல்லைன்னா என்ன செய்வே?’ என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

மேலும் , “என்னைப்பற்றி சான்றிதழ் கொடுக்க நீங்கள் என்ன ஐஎஸ்ஓ-வா?” என்றும், இன்னொரு நபரிடம் நித்யா கேட்டிருக்கிறார். பொதுவாகவே இணையதளங்களில் வலைதளவாசிகள் இப்படி அநாகரிகமான கமெண்டுகளை கொடுத்து வந்தால், பிரபலங்கள் அதை தவிர்த்து விட்டு செல்வது வழக்கம்.

இருந்தாலும் சிலர் துணிச்சலாக உடனுக்குடன் பதிலடி கொடுப்பதும் உண்டு. அப்படித்தான் நித்யாவும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிக்பாஸ் 2வது சீசனில், தாடி பாலாஜி போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தபோது, இந்த வீட்டுக்குள் நித்யாவும் வந்திருந்தார். இந்த நிலையில்தான் சமூக வலைதளங்களில் இப்படி பேசியவர்களுக்கு நித்யா கொடுத்துள்ள பதில்கள் வைரலாகி வருகின்றன.

Also Read: "போடு ரகிட.. ரகிட".. BiggBoss சீசன் 5 நிகழ்ச்சியை ஆடியன்ஸ் நேரில் பார்க்க அனுமதி? இதுதான் Rule-ஆ?

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Balaji wife nithya replies for social media comments

People looking for online information on Balaji, Biggbosstamil, Thaadibalaji, VijayTelevision, Vijaytv will find this news story useful.