www.garudabazaar.com
iTechUS

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை மட்டும் இத்தனை கோடி பேர் பாத்துருக்காங்களா .. முழு விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

BiggBoss Season 6 Tamil Viewers Count 30+ Million

                                               Image Credit : vijay television

Also Read | BIGG BOSS வின்னர் அசீம்க்கு இந்தியாவில் அறிமுகமாகும் விலையுயர்ந்த கார் பரிசு!!.. இந்த மாடலா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 நபர்கள்  பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா, ஏடிகே ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.

சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்து வெளியேறினார். இதையடுத்து அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். மைனா நந்தினியும் இறுதி போட்டிக்கு முன்னதாக எலிமினேட் ஆனார்.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.

நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன் & அசீம் இடையே ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அசீம் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அசீம் அறிவிக்கப்பட்டார்.

வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன் விஜய் டிவியின் தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி மேடை ஏறினார். அப்போது அவரிடம் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு களித்துள்ள மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என கேட்டார். இதற்கு பதில் அளித்த கிருஷ்ணன் குட்டி, "30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு களித்துள்ளனர்" என பதில் கூறினார். இதன் மூலம் 3 கோடிக்கும் அதிகமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு களித்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

Also Read | தளபதி 67 படத்தில் பகத் பாசில்?.. LCU-வா?.. செம பதில் அளித்த பகத்!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Season 6 Tamil Viewers Count 30+ Million

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss 6 Tamil Finale, Bigg Boss Tamil, BiggBoss Season 6 Tamil Viewers Count, Krishnan Kutty will find this news story useful.