"நான் ஜெயிச்சா 25 லட்ச ரூபாய் அவங்களுக்கு தான்".. பிக்பாஸ் வீட்டில் அசீம் உருக்கம்..!
முகப்பு > சினிமா செய்திகள்100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நாளையுடன் நிறைவுபெற இருக்கிறது. இதனிடையே இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதுதான் இப்போது சமூக வலை தளங்களில் பேச்சாக இருக்கிறது.
முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தார். இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன் குறித்து வெளியிட்ட அறிவிப்பு போட்டியாளர்களை திகைக்க வைத்திருந்தது.
இதன்மூலம் மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். ஆகவே, தற்போது விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்நிலையில் மூவரும் ரசிகர்களிடம் தங்களுக்கு ஒட்டு அளிக்குமாறும், தங்களுக்கு ஏன் வாக்கு அளிக்க வேண்டும்? எனவும் விளக்கம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கேமரா முன்னிலையில் பேசும் அசீம்,"நான் செய்த சிறு தவறுகளை மன்னித்து கோபத்தில் பேசிய வார்த்தைகளையும் மன்னிக்க வேண்டுகிறேன். தப்பு செய்தால் அது தவறு என்று தெரிந்தவுடன் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் குணம் எனக்கு இருக்கிறது. உங்களிடம் உரிமையாக என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கூறுகிறேன்"
"கொரோனாவில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நான் நிறைய உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன். அவர்களுக்கான கல்வி செலவை ஏற்கவேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆனால், நானும் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவன் தான். இந்த நிகழ்ச்சியில் நான் ஜெயித்தால் 25 லட்சம் அவர்களுக்கு சென்றடையுமாறு செய்யவிருக்கிறேன். என்னிடம் போதிய பணம் இல்லாததால் என்னை ஜெயிக்க வைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் வீழமாட்டேன் விழுந்தாலும் திமிரி எழும் தமிழன்" என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vikraman Received Customized Vathi Tshirt In BiggBoss House
- Actor Kavin And Aparna Das Enters Into BiggBoss House
- Finalists Asking People To Vote For Them In BiggBoss 6
- Biggboss Says He Loves Vikraman In BB Season 6
- Amudhavanan Opted To Go With Money Suitcase From BiggBoss
- Shivin Comment On Vikraman Coffee Making In BiggBoss
- Vikraman In Tears After BiggBoss Congratulate For His Future
- Amudhavanan And Asal Fun With Vikraman In BiggBoss
- BiggBoss Congratulate Azeem After This Season 6 Amid Finals
- Vikraman Talks To Mageshwari About Azeem In BiggBoss
- Myna Talking About Her Confidence Biggboss Congrats
- BiggBoss Surprises Amudhavanan By Showing Memorable Things
தொடர்புடைய இணைப்புகள்
- பெரிய Amount பணப்பெட்டியுடன் வெளியேறிய AMUDHAVANAN... BiggBoss 6 Latest Update
- "AZEEM, VIKRAMAN-க்கு VOTE பண்ணுங்கனு சொல்ல மாட்டேன்"💥 இவர் தான் WINNER, இதான் Reason🔥 ADK Interview
- திடீரென மயக்கம் போட்டு தரையில் விழுந்த VJ Kathir... பார்த்து சிரித்த Myna
- "LOVE Failure ஆகிடுச்சு💔 அவரு எனக்கு கிடைக்க மாட்டாரு 😭 ஆனா, Azeem"... Rojasree Open Heart Interview
- அழுதுட்டே வெளிய போன SHIVIN 😢 KATHIR GIRLFRIEND வந்தது தான் காரணமா?
- Kathirravan-னை கண்கலங்க வைத்த Bestie❤️… இன்னும் கொஞ்ச நாள் இருந்து Win பண்ணிட்டு வா
- ADK பார்க்க வந்த அப்பா…காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய Rachitha
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- "MYNA, நீ Bigg Boss-க்கு லாய்க்கே இல்ல.." Upset ஆன Myna Husband Yogesh
- ബിഗ്ബോസ് താരദമ്പതികളായ ഫിറോസിൻ്റേയും സജ്നയുടേയും വീട് അടിച്ച് തകർത്തു | താരങ്ങളുടെ ആദ്യ
- அடப்பாவிங்களா, DHANALAKSHMI EVICTED? 😱 FINALS போக வேண்டிய CONTESTANT ஆச்சே!
- "கழுத்த புடிச்சு செத்துரு செத்துருன்னு..." கொடுமைகளைBB -6ல் வேதனையுடன் சொன்ன Rachitha