www.garudabazaar.com

"சொடக்கு மேல சொடக்கு".. ஜி.பி. முத்துவின் வெறித்தனமான டான்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில நாட்களுக்கு முன் தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான சம்பவங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

BiggBoss Season 6 Tamil G P Muthu Dancing for TSK song with ADK

Also Read | விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் நடிக்கும் "இடம் பொருள் ஏவல்".. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

BiggBoss Season 6 Tamil G P Muthu Dancing for TSK song with ADK

பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரசிகர்களை கவரும் சம்பவம் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் ரசித்து வருகின்றனர். 

பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கினர். கைப்பிடிகள் கொண்ட கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரை எந்த போட்டியாளர் கீழே விழாமலோ அல்லது இறங்காமலோ அதனை பிடித்தபடி இருக்கிறாரோ அவரே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல் ஆளாக சாந்தி கீழே இறங்க, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர், தாக்குப்பிடித்தனர். இறுதியில் ஜி.பி. முத்து வெற்றி பெற்று கேப்டனாக செயல்பட உள்ளார்.

BiggBoss Season 6 Tamil G P Muthu Dancing for TSK song with ADK

இதன்மூலம் பிக்பாஸ் ஆறாவது சீசனின் முதல் கேப்டன் யார் என்பதற்கு பதில் கிடைத்தது. ஜி.பி. முத்துவின் போட்டியிடும் திறனால் ரசிகர்கள் பலர் ஜி.பி.முத்து கடுமையான போட்டியாளராக இருப்பார் என அவதானித்துள்ளனர். அதற்கு ஏற்றவாறு முத்துவும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஜி.பி.முத்து, சக போட்டியாளர் ADK உடன் இணைந்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சொடக்கு மேல சொடக்கு பாடலுக்கு இணைந்து 2 நிமிடங்களுக்கு மேல் மூச்சு வாங்க நடனம் ஆடியுள்ளார். ஜி.பி‌. முத்துவின் இந்த நடனக் காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Also Read | VIDEO: தனது வாழ்வின் சோகத்தை பகிர்ந்த ஜனனி.. முதல் ஆளாக தடுக்க வந்த விக்ரமன்! 2வது 3வது ஆள் இவங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Season 6 Tamil G P Muthu Dancing for TSK song with ADK

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, G P Muthu Dancing for TSK song, GP MUTHU, Vijay Television, Vijay tv will find this news story useful.