www.garudabazaar.com

இங்கிலாந்து நாட்டின் உலகப்புகழ் பெற்ற நகரில் பிரியங்கா மோகன்.. வீதி உலா வரும் வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை பிரியங்கா மோகன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் எடுத்த தனது சுற்றுலா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Priyanka Mohan Roaming Around in England London Streets

Also Read | Biggboss 6 Tamil : "அப்டி எல்லாம் பண்ண முடியாது".. அசீம் Vs ஆயிஷா??.. வாக்குவாதத்தில் முடிந்த சம்பவம்!!

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி நடித்து விக்ரம் குமார் இயக்கிய 'கேங் லீடர்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோக்களான ஜெயம் ரவியுடனும் நடிகர் தனுஷூடனும் ஜோடி சேர்ந்துள்ளார். தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தற்போது நடித்து வருகிறார்.

Priyanka Mohan Roaming Around in England London Streets

கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் திரையுலகில் அறிமுகமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

Priyanka Mohan Roaming Around in England London Streets

பிரியங்கா மோகன், தற்போது 3.8 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Priyanka Mohan Roaming Around in England London Streets

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில்  வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீல நிற உடையில் கருப்பு நிற மேலாடை அணிந்து நவநாகரீக தோற்றத்தில் பிரியங்கா மோகன் காட்சியளிக்கிறார். இந்த போட்டோவில் பிரிட்டன் தேசிய கொடிகள் கட்டப்பட்ட பின்னணியில் ஹாம்மர்ஸ்மித் பேருந்து செல்வது போல அமைந்துள்ளது.

 

Also Read | "BB6 Tamil : தலைவருக்கு வெக்கத்த பாரு".. மனைவி பத்தி பேசுறப்போ 'Feel' பண்ணிய ஜிபி முத்து!!

 

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Mohan Roaming Around in England London Streets

People looking for online information on England, London Streets, Priyanka Mohan will find this news story useful.