www.garudabazaar.com

விஜய் சேதுபதி & விஷ்ணு விஷால் நடிக்கும் "இடம் பொருள் ஏவல்".. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இடம் பொருள் ஏவல்' திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Vijay Sethupathi Vishnu Vishal Idam Porul Yaeval Release Update

Also Read | BB6 Tamil : டாஸ்க் முடிஞ்சு வெளிய வந்ததும் கண்ணீர் விட்ட அசீம்.. இதான் காரணம்!!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் தயாராகி உள்ள படம் 'இடம் பொருள் ஏவல்'. பாண்டி எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆசைத்தம்பி என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 2014-ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பூம்பாறை ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிக்கையை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், "அன்புடையீர் வணக்கம்.

இயக்குனர் திரு N.லிங்குசாமி வழங்கும் எங்கள் நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு சீனு.ராமசாமி அவர்களின் இயக்கத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் கதையில் "இடம் பொருள் ஏவல்" என்ற திரைப்படத்தினை தயாரித்து இருக்கிறோம்.

இப்படத்தில் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்களும், நம்பிக்கை நாயகன் திரு. விஷ்ணு விஷால் அவர்களும், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா மற்றும் வடிவுக்கரசி அவர்களும் நடித்திருக்கின்றனர்.

Vijay Sethupathi Vishnu Vishal Idam Porul Yaeval Release Update

கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் பாடல்களுக்கு முதல் முறையாக திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார்.“இடம் பொருள் ஏவல்” திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகையால் இப்படத்தை மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,N. சுபாஷ் சந்திர போஸ்,

தயாரிப்பாளர், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | இங்கிலாந்து நாட்டின் உலகப்புகழ் பெற்ற நகரில் பிரியங்கா மோகன்.. வீதி உலா வரும் வைரல் PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi Vishnu Vishal Idam Porul Yaeval Release Update

People looking for online information on Idam Porul Yaeval, Idam Porul Yaeval Release Update, Vijay Sethupathi, Vishnu Vishal will find this news story useful.