www.garudabazaar.com
iTechUS

கதிரவன் செஞ்சதுலயே தரமான சம்பவம் 🔥👏🏻.. விக்ரமன் & அசிம்.. Applause அள்ளிய டாஸ்க்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Kathirravan as bigg boss new task for house mates vikraman and azeem

Also Read | சமையல் விஷயத்துல விக்ரமன வெச்சு Fun பண்ணிய சாந்தி!!.. இப்டி எல்லாம் மனுஷன் இருந்துருக்காரா? 😅

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.

Kathirravan as bigg boss new task for house mates vikraman and azeem

இதனிடையே, தற்போது போட்டியாளர்கள் பிக் பாஸாக மாறலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, ADK, ஷிவின், கதிரவன் உள்ளிட்டோர் பிக் பாஸாக மாறி சில டாஸ்குகள் மற்றும் அசத்தலான அறிவிப்புகளையும் போட்டியாளர்களுக்கு கொடுக்கின்றனர்.

அப்போது பிக் பாஸாக மாறும் கதிரவன், அனைத்து போட்டியாளர்களின் பெஸ்ட் பற்றி மட்டுமே பேசும் படி அறிவுறுத்துகிறார். அதன் படி, விக்ரமன் குறித்து பாசிட்டிவான விஷயங்களை அசிம் பேசுகிறார்.

Kathirravan as bigg boss new task for house mates vikraman and azeem

"அதிகமான முரண், அதிகமான விவாதங்கள், பல நேரங்களில் வாக்குவாதங்கள் நடந்ததுன்னா எனக்கும் அவருக்கும் தான். அது எல்லாத்தையும் தாண்டி நான் பார்த்து வியந்த விஷயம், தன்னோட நிலை அறிந்து அந்த கோபம் வந்தா கூட, சக மனிதர்களை தனக்கு எதிரே பேசும் நபர்களை பாதித்து விடக்கூடாது என்பதில் மிகச் சிறந்த உதாரணமாக நான் விக்ரமனை இந்த வீட்டில் பார்க்கிறேன். என்னதான் இந்த வீட்டில எனக்கும் அவருக்கும் அதிகமான விவாதங்கள் வந்தால் கூட, நான் சில நேரம் கோபப்பட்டு வார்த்தையை விட்டால் கூட அவர் நினைச்சிருந்தா அதே மாதிரியான வார்த்தைகளை  விட்டிருக்கலாம். ஆனா அந்த நேரத்துல கூட அவர் தன்மையா பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பேசுற தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Kathirravan as bigg boss new task for house mates vikraman and azeem

நான் உட்பட அவர் மேல யாராவது நெகடிவ் விமர்சனங்கள் சொன்னா, அது எந்த அளவுக்கு Observe பண்ணனுமோ அந்த அளவுக்கு அப்சர்வ் பண்ணிருக்காரு. மொத்தமா சொல்லப்போனால் இந்த வீட்டுக்குள்ள வரும்போது விக்ரமனை நம்ம வேற கண்ணோட்டத்தில் பார்த்திருப்போம். ஆனா இப்போ இங்க விக்ரமன் வந்து 96 நாள்ல வேற ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். அவருடைய நல்ல எண்ணங்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்" என அசிம் தெரிவித்தார்.

Kathirravan as bigg boss new task for house mates vikraman and azeem

பிக் பாஸ் வீட்டில் நேருக்கு நேர் பல முறை பேச்சால் மோதி கொண்ட விக்ரமன் மற்றும் அசிம் ஆகியோர், தற்போது ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசியது சிறந்த தருணமாக பார்க்கப்படுகிறது. அதே போல, இப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்த கதிரவனையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

Also Read | "ஒரு வார்த்தை Trend ஆனது குத்தமா".. பூமர் வேணும்ன்னு விக்ரமன் கிட்ட அடம்புடிச்ச தனா..😅 செம Thug Life.!

தொடர்புடைய இணைப்புகள்

Kathirravan as bigg boss new task for house mates vikraman and azeem

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.