www.garudabazaar.com

"அதோட முடிச்சுக்கோங்க.. நான் பேசுற மாதிரி ஆகிடும்".. ADK பற்றி காட்டமாக பேசிய அசல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Argument between Asal Kolar and ADK in BiggBoss house

Also Read | "விக்ரமன் கிட்ட புடிச்ச விஷயம் அதுதான்".. மனம் திறந்த ரச்சிதா..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

Argument between Asal Kolar and ADK in BiggBoss house

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Argument between Asal Kolar and ADK in BiggBoss house

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு அசல் கோலார் அங்கு வருகிறார். அவருடன் பேச ADK முற்படுகிறார். ஆனால் அசல் பேச தயங்குகிறார். மேலும் அசல் பேசுகையில்," உங்களை பத்தி சில விஷயங்கள்லாம் தெரியுது. இந்த வீட்ல நான் இருந்தப்போ சில விஷயங்கள் பார்க்க முடியல. ஆனா வெளியே போயிட்டு சில விஷயங்கள்லாம் பார்த்தேன். அதெல்லாம் எனக்கு புடிக்கல" என்கிறார்.

அப்போது ADK," என்ன விஷயம்னு சொல்லு. உன்ன பத்தி ஏதாவது தப்பா பேசுனேனா?" எனக் கேட்க, "தப்பா இல்ல. ஆனா உள்ள வரும்போதே உங்ககிட்ட அவ்ளோவா பேசவேண்டாம்னு நெனச்சிட்டு தான் வந்தேன்" என்கிறார் அசல்.

Argument between Asal Kolar and ADK in BiggBoss house

தொடர்ந்து பேசும் ADK,"சரி பேசாத. ஆனா என்னன்னு சொல்லிட்டு போ" என்கிறார். அதற்கு அசல்,"பாக்குறப்போ நீங்க ஒன்னு பண்றிங்க. ஆனா பின்னாடி அது வேற ஒன்னா இருக்குது. வந்த அன்னைக்கே அத பத்தி பேசவேண்டாம்னு நெனைக்கிறேன். அது என்ன விஷயம்னு எனக்கு தோணுச்சுன்னா நான் சொல்றேன். இல்லைன்னா நீங்க வெளில போயிட்டு பாத்துக்கோங்க" என்கிறார்.

ADK மீண்டும் "உன்ன பத்தி ஏதாவது பேசுனேனா?" என கேட்க, "வேண்டாம் விடுங்க. அப்பறம் நான் நெறய விஷயம் பேசுற மாதிரி வரும்" என்கிறார். அப்போது, ADK "பேச விருப்பம் இல்லைன்னா விடு. பிரச்சனையே இல்ல. அதுனால நான் எதையும் இழக்க போறது கிடையாது" என்கிறார். தொடர்ந்து இருவரையும் சமாதானப்படுத்த போட்டியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

Also Read | "ஜிபி முத்து அண்ணா இருந்தா ஒரு Vibe இருக்கும்".. மிஸ் பண்ணி லைவில் ஃபீல் செய்த ரச்சிதா! Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

Argument between Asal Kolar and ADK in BiggBoss house

People looking for online information on ADK, Argument between Asal Kolar and ADK, Asal kolaar, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Robert master, Vijay Television, Vijay tv will find this news story useful.