www.garudabazaar.com

ADK-வுக்கு வந்த உடல் சிக்கல்.. அமுது கொடுத்த அட்வைஸை கேட்டு மிரண்டு போன விக்ரமன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Amudhavanan gives Health advice to ADK Kidney stone

Also Read | 'துணிவு'-ல அஜித் குமார் கேரக்டர் பெயர் இதுதானாம்.. வெளியான மாஸ் தகவல்..!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Amudhavanan gives Health advice to ADK Kidney stone

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Amudhavanan gives Health advice to ADK Kidney stone

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது.

இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வீட்டுக்குள் விக்ரமன், அமுதவாணன், ADK, கதிரவன் மற்றும் அசீம் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ADK தனக்கு உள்ள கிட்னி ஸ்டோன் சிக்கல் குறித்து பேசுகிறார். அப்போது அமுதவாணன்,"ஸ்டோனுக்கு நான் ஒரு வழி சொல்றேன். ஆந்திரா பக்கம் கால் கட்டை விரலால அழுத்தியே கல்லை சரி பண்ணிடுவாங்க" என்கிறார். அப்போது விக்ரமன்,"அதெல்லாம் பண்ணக்கூடாதுங்க" என்கிறார்.

Amudhavanan gives Health advice to ADK Kidney stone

இதை கேட்டுக்கொண்டிருக்கும் அசீம்,"ஆமா நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆந்திரால நெறய பேருக்கு இப்படி பண்ணி சரி ஆகிருக்கு. ஆனால் நான் போனது இல்ல" என்கிறார். இதனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கும் கதிரவன்,"கிட்னி ஸ்டோனை விரலால எடுப்பாங்களா?" எனக் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் அமுதவாணன்,"இப்போ கையில துவைக்கிறதுக்கும் வாஷிங் மிஷின்ல போடுறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல" எனக் கூற "ஏங்க அவரும் வாஷிங் மிஷினும் ஒண்ணா?. அதுக்கு எல்லாம் மாடர்ன் மெடிசின் இருக்கு" என்கிறார் விக்ரமன்.

தொடர்ந்து, "ஒரு எக்சாம்பிள்காக சொன்னேங்க. ஆனா நெறய பேருக்கு இப்படி செஞ்சு சரி பண்ணிருக்காங்க" என்கிறார் அமுதவாணன். அதனை விக்ரமன் சிரித்தபடியே மறுக்கிறார்.

Also Read | வாரிசு இசை வெளியீட்டு விழா.. விஜய் பேசியதை ஆர்வமுடன் பார்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan gives Health advice to ADK Kidney stone

People looking for online information on Amudhavanan, Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.