www.garudabazaar.com
iTechUS

சமையல் விஷயத்துல விக்ரமன வெச்சு Fun பண்ணிய சாந்தி!!.. இப்டி எல்லாம் மனுஷன் இருந்துருக்காரா? 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Shanthi about vikraman behaviour in cooking bigg boss

Also Read | "அறம் வெல்லும்".. ஏன் சம்மந்தமே இல்லாம இங்க பேசுறீங்க?.. தனா முன்வைத்த கேள்வி.. விக்ரமன் பதில்ஸ்!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோரும் தற்போது சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர்.

Shanthi about vikraman behaviour in cooking bigg boss

பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது. அப்படி ஒரு சூழலில், தற்போது உள்ளே வந்துள்ள சாந்தி, சமையல் வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. அப்போது அங்கே விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

Shanthi about vikraman behaviour in cooking bigg boss

அந்த சமயத்தில் விக்ரமன் குறித்து பேசும் சாந்தி, "இவரு ஆரம்பத்துல அது ஏன் (சமையலில்) போடுறீங்கன்னு கேப்பாரு. இவரு கேக்குறது பாத்தா கத்துக்குற மாதிரி இருக்காது. நம்மள வந்து தெரிஞ்சு ஏதோ தப்பு தப்பா போடுறோம்ன்னு கேள்வி கேக்குற மாதிரி இருக்கும். கடைசியில பாத்தா சமையலே தெரியாது. ஆனா இப்ப சமையல் எல்லாம் கத்துக்கிட்டாரு. பப்பு எல்லாம் சூப்பரா பண்ணி இருக்காங்க" என கூறினார்.

Shanthi about vikraman behaviour in cooking bigg boss

இதன் பின்னர் பேசும் மைனா, "வேற வழி இல்ல. பண்ணி தான் ஆகணும்" என தெரிவித்தார். சமையல் குறித்து விக்ரமன், சாந்தி உள்ளிட்டோர் மத்தியில் ஜாலியாக நடந்த உரையாடல் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Also Read | "விக்ரமன் - ரச்சிதா Chemistry நல்லா இருக்கு, ஆனா என் கூட".. ஷிவினிடம் போட்டு உடைத்த ராபர்ட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Shanthi about vikraman behaviour in cooking bigg boss

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Shanthi, Vikraman will find this news story useful.