www.garudabazaar.com
www.garudabazaar.com

நடிகர் பிரபுவுடன் பிக்பாஸ் முகேன் நடிக்கும் புதிய படம்... ஹீரோயின் யார் தெரியுமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட முகேன் ராவ் தனது நடவடிக்கைகளால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும்தனது சிறப்பான செயல்பாடுகளால் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வருடம் வெளியானது. வெற்றி  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெப்பம் பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.  நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

biggboss mugen new film announcement பிக்பாஸ் முகேன் நடிக்கும் புதிய படம்

இந்த படத்தில் முகேன் ராவிற்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். ஶ்ரீதி  நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் அஞ்சனா, இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும்.

biggboss mugen new film announcement பிக்பாஸ் முகேன் நடிக்கும் புதிய படம்

இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை முகேன் தற்போது வெளியிட்டுள்ளார். வேலன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அவரது இரண்டாவது படமாகும். கவின் மூர்த்தி கே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கென்னடி கிளப் படத்தில் நடித்த  மீனாட்சி கோவிந்தராஜன்  கதாநாயகியாக நடித்துள்ளார்.  கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

biggboss mugen new film announcement பிக்பாஸ் முகேன் நடிக்கும் புதிய படம்

Tags : Mugen

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

biggboss mugen new film announcement பிக்பாஸ் முகேன் நடிக்கும் புதிய படம்

People looking for online information on Mugen will find this news story useful.