www.garudabazaar.com

பிக்பாஸ் முகேன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ஹீரோயின் இவரா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட முகேன் ராவ் தனது நடவடிக்கைகளால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும்தனது சிறப்பான செயல்பாடுகளால் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.

Bigg Boss Mugen Roa's movie first look is out | பிக்பாஸ் முகேன் ராவ் பட ஃபர்ஸ்ட் லுக் இதோ

இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. வெற்றி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெப்பம் பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.  நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

Bigg Boss Mugen Roa's movie first look is out | பிக்பாஸ் முகேன் ராவ் பட ஃபர்ஸ்ட் லுக் இதோ

இந்த படத்தில் முகேன் ராவிற்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். ஶ்ரீதி  நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் அஞ்சனா, இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும்.

முகேன் ராவை இக்கதாபாத்திரத்திற்கு ஏதேச்சையாகத்தான் தேர்ந்தெடுத்தோம். தோற்றத்தில் இறுக்கத்துடன், முரட்டுதனமாக இருப்பவர். தன்னுடன் பழகும் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும் அன்பான குணமுடையவர். முகேன் ராவ் உணர்வுகளை எளிதாக கையாளும் அதே நேரம், ஆக்சன் காட்சிகளையும் எளிதாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்.

Bigg Boss Mugen Roa's movie first look is out | பிக்பாஸ் முகேன் ராவ் பட ஃபர்ஸ்ட் லுக் இதோ

அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாட்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஒரே ஒரு பேரழகி. தான் இருக்கும் இடத்தை ஜொளிக்க வைப்பவர், கடும் உழைப்பாளி. படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். அவர் அழகும், திறமையும் கொண்டவர் மட்டுமல்ல, வெகு சரளாமாக தமிழ் பேசக்கூடியவர். அது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன்'' என்றார்.

பிக்பாஸ் முகேன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ஹீரோயின் இவரா ? வீடியோ

Bigg Boss Mugen Roa's movie first look is out | பிக்பாஸ் முகேன் ராவ் பட ஃபர்ஸ்ட் லுக் இதோ

People looking for online information on Bigg boss, Mugen Rao, Vettri will find this news story useful.