www.garudabazaar.com
www.garudabazaar.com

'இந்த கூட்டணி இணைவதை பாத்துருக்கீங்களா?'.. சந்தானத்தின் டிக்கிலோனா முக்கிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் 3 கெட்டப்புகளில் நடித்திருக்கும் டைம் டிராவல் நகைச்சுவை படம் 'டிக்கிலோனா'. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுயோஸ் மற்றும் சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Santhanam Dikkilona Per Vechaalum release update டிக்கிலோனா

சந்தானம், யோகி பாபு, ஹர்பஜன் சிங், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், அனகா, ஷிரின், ஷாரா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லரில் 2027ல் இருந்து 2020 ஆம் ஆண்டுக்கு தமது கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்காக சந்தானம் செல்வதாக கூறப்படுகிறது. இதேபோல் டிரெய்லரின் இறுதியில் சந்தானம் மூன்று கெட்டப்புகளில் ஒரே காட்சியில் தோன்றுவார்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  டிரெய்லரின் பின்னணியிலேயே கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தின் பேர் வச்சாலும் பாடலின் இசை ஒலிக்கும். இளையராஜா இசையில் உருவான இந்த பாடலும் படத்தில் ரீமேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு  டிக்கிலோனா படத்தின் 2வது பாடலான பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் பாடல் வெளியாகும் என்றும் இதுவரை இளையராஜா+யுவன் ஷங்கர் ராஜா + மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி ஆகியோர் இணைந்த கூட்டணியை பார்த்துள்ளீர்களா என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

Santhanam Dikkilona Per Vechaalum release update டிக்கிலோனா

People looking for online information on Dikkilona, Ilaiyaraaja, S.Janaki, Santhanam, Yuvan Shankar Raja will find this news story useful.