பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் முதல் படம்... வெளியாகிறது பர்ஸ்ட் லுக்... எப்போது தெரியுமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது செயல்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது. 

பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் Biggboss Losliya Friendship movie first look releasing date

மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் அவர் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் லாஸ்லியாவின் லுக் எப்படி இருக்க போகிறது என்று பலரும் எதிர்பார்க்கும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை(05.06.2020) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் Biggboss Losliya Friendship movie first look releasing date

People looking for online information on Arjun, Friendship, Harbhajan Singh, Losliya will find this news story useful.