Bigg Boss Tamil 3 : Neutral ரேஷ்மா வெளியேனார்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 04, 2019 10:58 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 43ம் நாள் எபிசோடில் 5வது போட்டியாளராக ரேஷ்மா வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கி வார வாரம் பல சுவாரஸ்யங்களுடன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன் ஆகியோர் வெளியேறினர்.
அவர்களை தொடர்ந்து கடந்த வாரம் எலிமினேஷனுக்கு அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா, மதுமிதா ஆகிய 5 பேர் நாமினேட் ஆகினர். இவர்களில் மதுமிதா நேற்றைய எபிசோடில் காப்பாற்றப்படுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் நியூட்ரலாக கருத்துக் கூறி இரு தரப்பிலும் நல்ல பொண்ணு இமேஜை தக்க வைத்துக் கொண்டவர் ரேஷ்மா. கடந்த வாரம் சேரனும், முகெனும் எவிக்ஷனுக்கு ரேஷ்மாவை நாமினேட் செய்திருந்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக நாமினேட் ஆன முதல் எவிக்ஷனிலேயே ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.
மக்கள் அளித்த வாக்குகளில் மிக குறைந்த வித்தியாசத்தில் பின் தங்கியதால் ரேஷ்மா வெளியேற நேர்ந்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார். ரேஷ்மாவின் எவிக்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.