'மகளின் முதல் பிறந்தநாள்ன்னா, ஸ்பெஷல்தானே' - பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

மகளின் முதல் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம் | biggboss fame actor ganesh venkatram celebrates his daughter's first birthday

தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருபவர் கணேஷ் வெங்கட்ராம். இவர் ராதாமோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது குடும்பத்தினருடன் அவரது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். தனது மனைவி நிஷா மற்றும் மகள் சமைராவுடன் கணேஷ் வெங்கட்ராம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பிறந்தநாள் முதல், தன் மகள் சிறகடித்து பறக்க, உந்தித்தள்ளும் காற்றாக இருக்க விரும்புகிறேன் எனவும் அவர் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

மகளின் முதல் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம் | biggboss fame actor ganesh venkatram celebrates his daughter's first birthday

People looking for online information on Anchor Nisha, Ganesh Venkatram, Ganesh Venkatram Family will find this news story useful.