இது நிஜமாகவே ஒரு லாக்டவுன் சர்ப்ரைஸ் - கோப்ரா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்-விபரங்கள் உள்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று மாலை, விக்ரமின் கோப்ரா படத்தின் முதல் சிங்கிளான தும்பி துள்ளல்லோ பாடல் ரிலீஸ் ஆனது. இப்போது, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும்விதமாக, படக்குழுவினர் ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த டபுள் பரிசு  விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Chiyan vikrams cobra thumbi thullal animation song released

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து கோப்ராவை இயக்கியுள்ளனர். கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் டிக் டாக் புகழ் மிருணாளினி ரவி இப்படத்தில் நடிக்கின்றனர்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஹரிஷ்குமார் கையாள்கிறார்.

இந்த படத்துடன் விக்ரம் இயக்குனர் மணி ரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படமான பொன்னியன் செல்வனில் நடிக்கிறார். தவிர கெளதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் உள்ளிட பல படங்களை வரிசையாக நடிக்கவிருக்கிறார் சீயான்.

தற்போது வெளியான புத்தம் புதிய அனிமேஷன் வீடியோ:

Chiyan vikrams cobra thumbi thullal animation song released

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, Mru, Thumbi Thullal, Vikram will find this news story useful.