ராதா மோகன் இயக்கத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்திருந்த 'அபியும் நானும்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'உன்னைப் போல் ஒருவன்', 'தனி ஒருவன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

அதன் பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவர் டிவி தொகுப்பாளர் நிஷாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பெண் குழந்தையுள்ளது.
இந்நிலையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து 'யாரென்று கண்டுபிடியுங்கள்' என்று தெரிவித்துள்ளார். அவரது புகைப்படத்துக்கு அழகாக இருப்பதாக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு நடிகை பூஜா ராமச்சந்திரன் ''க்யூட். எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கீங்க'' என்று கமெண்ட் செய்துள்ளார்.